/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'லொடுக்கு பாண்டி' ஸ்டைலில் வீட்டு உபயோக பொருட்கள் திருட்டு
/
'லொடுக்கு பாண்டி' ஸ்டைலில் வீட்டு உபயோக பொருட்கள் திருட்டு
'லொடுக்கு பாண்டி' ஸ்டைலில் வீட்டு உபயோக பொருட்கள் திருட்டு
'லொடுக்கு பாண்டி' ஸ்டைலில் வீட்டு உபயோக பொருட்கள் திருட்டு
ADDED : மார் 20, 2024 11:42 PM
புதுச்சேரி : ஏனாமில் 'லொடுக்கு பாண்டி' ஸ்டைலில், வீட்டின் கதவை உடைத்து, அனைத்து பொருட்களையும் மூட்டை கட்டி மினி வேனில் ஏற்றிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி, ராஜமகேந்திரவரம் பகுதியைச் சேர்ந்தவர் அனில்மோகன், 33; ஏனாம் பிராந்தியம் மேட்டகுரு, கணபதி நகரில் வாடகை வீட்டில் தங்கி, அங்குள்ள இறால் பண்ணையில் வேலை செய்து வருகிறார்.
இவர், கடந்த 1ம் தேதி வாடகை வீட்டை பூட்டிக்கொண்டு, ஆந்திராவில் உள்ள சொந்த ஊருக்கு சென்றார். 4ம் தேதி ஏனாம் திரும்பியபோது, வீட்டின் கதவு உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த ஏ.சி., டி.வி., கட்டில், மெத்தை, 2 காஸ் சிலிண்டர்கள், மிக்ஸி, எலக்ட்ரிக் ரைஸ் குக்கர், 2 ஸ்டெபிளைசர்கள், காஸ் அடுப்பு, 2 டேபிள்கள் என வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் திருடு போயிருந்தது.
இதுகுறித்து அனில்மோகன் நேற்று முன்தினம் அளித்த புகாரின் பேரில், ஏனாம் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், மர்ம நபர் ஒருவர் வீட்டின் கதவை உடைத்து, வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் வேனில் ஏற்றிச் சென்றது தெரியவந்தது.
நந்தா திரைப்படத்தில் வரும் 'லொடுக்கு பாண்டி' ஸ்டைலில், வீட்டு உபயோக பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

