/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாகூர் புனித ஜெயராக்கினி அன்னை ஆலய தேர்பவனி
/
பாகூர் புனித ஜெயராக்கினி அன்னை ஆலய தேர்பவனி
ADDED : ஆக 24, 2025 07:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் பாகூரில் புனித ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டு பெருவிழாவையொட்டி, ஆடம்பர தேர் பவனி நேற்று நடந்தது.
பாகூர் புனித ஜெயராக்கினி அன்னை ஆலய 159வது ஆண்டு பெருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் காலை நற்கருணை ஆசிர், திருப்பலி, மாலையில் தேர் பவனி நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை 8:30 மணிக்கு கூட்டு திருப்பலி, இரவு 7:00 மணிக்கு ஆடம்பர தேர் பவனி நடந்தது. இதையொட்டி, வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில், புனித ஜெயராக்கினி அன்னை சொரூபம் அமர்த்தப்பட்டு அந்த தேர், பாகூர் மாட வீதிகள் வழியாக பவனி வந்தது. திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.