sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி கடற்கரை சாலையில் தீவிரவாத தாக்குதல் தடுப்பு ஒத்திகை

 புதுச்சேரி கடற்கரை சாலையில் தீவிரவாத தாக்குதல் தடுப்பு ஒத்திகை

 புதுச்சேரி கடற்கரை சாலையில் தீவிரவாத தாக்குதல் தடுப்பு ஒத்திகை


ADDED : பிப் 11, 2026 04:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2026 04:45 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலையில் நடந்த தீவிரவாத தாக்குதல் தடுப்பு ஒத்திகையில் துப்பாக்கி ஏந்திய தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் பங்கேற்றனர்.

சென்னை தேசிய பாதுகாப்பு படை, இந்திய விமானப் படை, புதுச்சேரி மற்றும் விழுப்புரம் காவல்துறையினருடன் இணைந்து புதுச்சேரி மற்றும் ஆரோவில் பகுதிகளில் 3 நாட்கள் தீவிரவாத தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தி வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி நகராட்சி கட்டடத்தில் தேசிய பாதுகாப்பு படையினரின் ஒத்திகை நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதில் தீவிரவாதிகளின் தாக்குதல்களை தடுக்கும் வகையில் ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் மேரி கட்டடத்தின் மீது துப்பாக்கியுடன் இறங்கிய தேசிய பாதுகாப்பு படையினர் ஓவ்வொரு அறையாக சோதனை செய்தனர்.

தொடர்ந்து ஒரு கட்டடத்தில் தீவிரவாதிகள்திடீரென நுழைந்து தாக்குதல் நடத்தினால் எப்படி தடுப்பது. வெடிகுண்டுகளை கண்டறிந்து செயலிழக்க செய்வது. தீவிரவாதிகளின் பிடியில் உள்ள பிணையக் கைதிகளை பாதுகாப்பாக மீட்பது போன்றவை தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சிகள் நடந்தன.

தேசிய பாதுகாப்பு படையினரின் ஹெல்மெட்டில் அணிந்திருந்த கண்காணிப்பு கேமரா மூலம் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை, காந்தி திடலில் வாகனத்தில் இருக்கும் நடமாடும் கண்காணிப்பு அறை வழியாக பாதுகாப்பு படை அதிகாரிகள் கண்காணித்தனர்.

முக்கிய அரசு அலுவலகங்களில் தேசிய பாதுகாப்பு படையினர் ஒத்திகையில் ஈடுபட்டனர். இந்த ஒத்திகை நிகழ்ச்சி இரவு 10:00 மணி வரை நீடித்தது. இதில் தேசிய பாதுகாப்பு படை கமாண்டோ தலைமையில் 200க்கும் மேற்பட்ட வீரர்கள், புதுச்சேரி போலீசார், வருவாய்த்துறையினர், தீயணைப்பு படை வீரர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் பல்வேறு அரசுத்துறையினர் ஈடுபட்டனர்.

கடற்கரை சாலையில் திடீரென ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்ததால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளிடையே சிறுது நேரம் பரபரப்பு நிலவி யது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us