/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துப்புரவு பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்
/
துப்புரவு பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்
ADDED : அக் 09, 2024 11:00 PM
புதுச்சேரி: உழவர்கரை நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரியில் தற்போது மழை காலம் துவங்கியுள்ளதால், காலி மனைகளில் தேங்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் கொசு மருந்து தெளித்தல், புகைமருந்து அடித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மூன்று நாட்களுக்கு கபசுர குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி, ரெட்டியார்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் பணியை, ஆணையர் சுரேஷ்ராஜ் துவக்கி வைத்தார். சித்த மருத்துவர் ராஜலட்சுமி, கபசுர குடிநீரின் நன்மைகள் குறித்து விளக்கம் அளித்தார்.

