/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆசிரியர் இல்லாததை கண்டித்து மாணவர்கள் திடீர் போராட்டம்
/
ஆசிரியர் இல்லாததை கண்டித்து மாணவர்கள் திடீர் போராட்டம்
ஆசிரியர் இல்லாததை கண்டித்து மாணவர்கள் திடீர் போராட்டம்
ஆசிரியர் இல்லாததை கண்டித்து மாணவர்கள் திடீர் போராட்டம்
ADDED : ஆக 23, 2025 11:59 PM

வில்லியனுார் : தொண்டமாநத்தம் அன்சாரி துரைசாமி அரசு மேல்நிலைப் பள்ளி சமூக அறிவியல் ஆசிரியர் இல்லாதை கண்டித்து மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
ஊசுடு தொகுதி, தொண்டமாநத்தம் கிராமத்தில் அன்சாரி துரைசாமி அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் 196 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
பள்ளியில் முதல்வர், துணை முதல்வர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகளில் யாரும் இல்லாததால், தமிழ் விரிவுரையாளர் மனோன்மணி பொறுப்பாசிரியராக நிகமிக்கப்பட்டு, பணியாற்றி வருகிறார். இவருடன்15 ஆசிரியர்கள் மற்றும் 10 பேர்கள் எல்.டி.சி., அலுவலக உதவியாளர் உள்ளிட்டோர் பணி செய்து வருகின்றனர்.
இவ்வாண்டு பள்ளி துவங்கியதில் இருந்து பத்தாம் வகுப்பிற்கு சமூக அறிவியல் பாடத்திற்கான ஆசிரியர் இல்லாமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இது குறித்து பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில், தொகுதி எம்.எல்.ஏ., கல்வித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால், இதுவரை ஆசிரியர் நியமிக்கப்பட வில்லை.
இந்நிலையில் வரும் 25ம் தேதி முதல் பள்ளியில் மாணவர்களுக்கு முதல் பருவ தேர்வு துவங்குகிறது. இதனிடையே சமூக அறிவியல் ஆசிரியர் இல்லாததை கண்டித்து, மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் நேற்று காலை 10:30 மணியளவில் தொண்டமாநத்தம் - சேதராப்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டு, கோஷமிட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த சாய்சரவணன்குமார் எம்.எல்.ஏ., கல்வித்துறை அதிகாரிகளிடம் பேசினார். அப்போது திங்கள் கிழமை சமூக அறிவியல் ஆசிரியர்நியமனம் செய்வதாக வாக்குறுதி அளித்தனர். அதனை ஏற்று, அனைவரும் காலை 11:00 மணியளவில் கலைந்துசென்றனர். இதனால், அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.