/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குடியரசு தின விழாவில் மாணவர்கள் கவுரவிப்பு
/
குடியரசு தின விழாவில் மாணவர்கள் கவுரவிப்பு
ADDED : ஜன 27, 2026 04:29 AM
புதுச்சேரி: குடியரசு தினவிழாவில் கல்வி, விளையாட்டு மற்றும் கலைகளில் சிறந்து விளங்கிய மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
மத்திய கல்வி அமைச்சத்தின் கலா உத்சவ் கலை போட்டியில் இரண்டு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கல பதக்கத்துடன் புதுச்சேரி மாநிலம் தேசிய அளவில் இரண்டாம் இடத்துடன் பெற்று ஆதிக்கம் செலுத்தியது.
இதில், பாரம்பரிய கதை சொல்லும் போட்டியில் பிரெசிடென்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கிருபாவீர், சஹானா ஆகியோர் தேசிய அளவில் முதல் பரிசு பெற்றனர்.
பாரம்பரிய பொம்மைகள் செய்தல் போட்டியில் பிரெசிடென்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சுமன்ராஜ், ஸ்ரீமதி ஆகியோர் தேசிய அளவில் முதல் பரிசு பெற்றனர்.
குழு நடன போட்டியில் பிரெசிடென்சி மேல்நிலைப் பள்ளி மாணவிகள் அனத்சியா அபிமதி, ஷாலினி, லக்ஷணா, கனிஷ்மா ஆகியோர் தேசிய அளவில் 2ம் பரிசு பெற்றனர்.
இசை கருவி மீட்டல் போட்டியில் அமலோற்பவ லுார்து அகாடமி மாணவர்கள் சஞ்சீவ், நவீன் கார்த்திகேயன், மோனிஷ், மாணவி காயத்ரி ஆகியோர் தேசிய அளவில் 3ம் பரிசு பெற்றனர். இவர்கள் அனைவருக்கும் குடியரசு தினவிழாவில் கவர்னர் கைலாஷ்நாதன் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

