sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாநில அளவில் அபாகஸ், வேத கணித போட்டி

 மாநில அளவில் அபாகஸ், வேத கணித போட்டி

 மாநில அளவில் அபாகஸ், வேத கணித போட்டி


ADDED : டிச 10, 2025 05:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 10, 2025 05:14 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: பாகூர் சுபிக்ஷம் அபாகஸ் மற்றும் வேத கணிதம் அகாடமி சார்பில், 'அச்சீவர்ஸ் -25' என்ற தலைப்பில், 3வது மாநில அளவிலான, அபாகஸ் மற்றும் வேத கணித போட்டி உச்சிமேடு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

சுபிக்ஷம்அபாகஸ் நிறுவனர்நாகலட்சுமி ஹரிஹரன் குத்து விளக்கு ஏற்றி விழாவினை துவக்கி வைத்தார். புதுவை தமிழ்ச் சங்க துணை தலைவர் திருநாவுக்கரசு, சித்த மருத்துவர் பூவிழி ஆகியோர் அபாகஸ் மற்றும் வேத கணித போட்டியை துவக்கி வைத்தனர்.

இப்போட்டியில், புதுச்சேரி, தமிழக பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் கலந்து கொண்டு தங்களின் அபாகஸ் மற்றும் வேத கணித திறமைகளை வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து, நடந்த பரிசளிப்பு விழாவில், ஜெ.சி.எம்., மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார், டாக்டர் அமுதவாணி, செயின்ட் அந்தோணி பள்ளியின் முதல்வர் சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டு, அபாகஸ், வேத கணிதம், நாட்டியம், யோகா, செஸ், இந்தி, தட்டச்சு, இசை, போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினர். மாணவ - மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us