/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில தொழில்துறை வளர்ச்சி கவர்னர் தலைமையில் ஆலோசனை
/
மாநில தொழில்துறை வளர்ச்சி கவர்னர் தலைமையில் ஆலோசனை
மாநில தொழில்துறை வளர்ச்சி கவர்னர் தலைமையில் ஆலோசனை
மாநில தொழில்துறை வளர்ச்சி கவர்னர் தலைமையில் ஆலோசனை
ADDED : மே 04, 2025 05:06 AM

புதுச்சேரி மாநில தொழில்துறை வளர்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், பிரதமர் அறிவித்த பெஸ்ட் புதுச்சேரி செயல் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டுமென கவர்னர் கைலாஷ்நாதன் அறிவுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் ராஜ் நிவாசில் நேற்று நடந்தது.
கவர்னர் கைலாஷ்நாதன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், அமைச்சர் நமச்சிவாயம், கவர்னரின் செயலர் மணிகண்டன், தொழில் வளர்ச்சித்துறை செயலர் ருத்ர கவுடு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தொழில்துறை வளர்ச்சிக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கவர்னர் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, அவர் பேசுகையில், 'புதுச்சேரியில் தொழில் துறை வளர்ச்சிக்கு ஏற்ற சாதகமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். புதிய தொழில் முதலீட்டாளர்களை கவரும் வகையிலான திட்டங்களையும், நடைமுறைகளையும் செயல்படுத்த வேண்டும். புதிய தொழில் தொடங்குவதற்கு ஏற்ற அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.
தொழில்நுட்ப பூங்கா, ஜவுளி பூங்கா போன்ற தொழில் துறைகளை தொடங்க ஆர்வம் காட்டும் தொழில் முதலீட்டாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும். பிரதமர் மோடி அறிவித்த 'பெஸ்ட் புதுச்சேரி' செயல்திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்' என்றார்.

