/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாலிபால் வீரர்களுக்கு சபாநாயகர் வாழ்த்து
/
வாலிபால் வீரர்களுக்கு சபாநாயகர் வாழ்த்து
ADDED : டிச 14, 2025 05:36 AM

புதுச்சேரி: தேசிய அளவிலான வாலிபால் போட்டியில் பங்கேற்க உள்ள புதுச்சேரி அணியினர் சபாநாயகர் செல்வத்திடம் வாழ்த்து பெற்றனர்.
ராஜஸ்தானில் 49வது தேசிய ஜூனியர் வாலிபால் போட்டிகள் வரும் 16ம் தேதி துவங்கி, 22ம் தேதி வரை நடக்கிறது. ஏழு நாட்களுக்கு நடக்கும் இந்த போட்டியில் நாடு முழுதும் இருந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் பங்கேற்கின்றன.
இந்த போட்டியில் புதுச்சேரியில் இருந்து ஆண்கள் அணியினரும், பெண்கள் அணியினரும் கலந்து கொள்கின்றனர்.முன்னதாக, புதுச்சேரி வாலிபால் சங்க தலைவர், சபாநாயகர் செல்வத்திடம் புதுச்சேரி அணியின் வீரர்கள் வாழ்த்து பெற்றனர். புதுச்சேரி வாலிபால் சங்கத்தின் செயலாளர் ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

