/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சித்த மருத்துவ தின விழிப்புணர்வு ஊர்வலம்
/
சித்த மருத்துவ தின விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : டிச 21, 2024 05:01 AM

திருக்கனுா : காட்டேரிக்குப்பம் இந்திராகாந்தி அரசு உயர்நிலைப் பள்ளியில், அரசு சுகாதார நிலைய சித்த மருத்துவ பிரிவு சார்பில் 8வது சித்த மருத்துவ தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தலைமை ஆசிரியை கவிதா ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். காட்டேரிக்குப்பம் அரசு சுகாதார நிலைய சித்த மருத்துவர் சிவகாமசுந்தரி, சித்த மருத்துவம் மற்றும் மூலிகை செடியின் மகத்துவம் குறித்து பேசினார். மருத்துவ அதிகாரி ராஜஸ்ரீ முன்னிலை வகித்தார்.
உடற்கல்வி ஆசிரியர் பாலசங்கர், ஆசிரியர்கள் ராஜலட்சுமி, கலைவாணி, ஈஸ்வரன், வெங்கடேசன், சுகுணா ஆகியோர் ஏற்பாட்டில் மாணவ, மாணவியர் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று சித்த மருத்துவத்தின் பயன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து, மாணவர்களிடையே ஓவியம், மூலிகை பாதுகாப்பு தொடர்பான வினாடி- வினா உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

