/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சர்வீஸ் புத்தகம் டிஜிட்டல் மயம் நிறைவு நாள் பயிற்சி முகாம்
/
சர்வீஸ் புத்தகம் டிஜிட்டல் மயம் நிறைவு நாள் பயிற்சி முகாம்
சர்வீஸ் புத்தகம் டிஜிட்டல் மயம் நிறைவு நாள் பயிற்சி முகாம்
சர்வீஸ் புத்தகம் டிஜிட்டல் மயம் நிறைவு நாள் பயிற்சி முகாம்
ADDED : அக் 09, 2024 04:23 AM

புதுச்சேரி, : அரசு ஊழியர்களின் சர்வீஸ் புத்தகம் டிஜிட்டல் மயமாக்கப்படுவது குறித்த பயிற்சி நிறைவடைந்தது.
மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் பயிற்சி துறையின் வழிகாட்டுதலின்படி, புதுச்சேரி அனைத்து துறை அரசு ஊழியர்களின் சர்வீஸ் புத்தகம், டிஜிட்டல் மயமாக்கும் பணியில் புதுச்சேரி அரசு ஈடுபட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி தலைமை செயலகத்தில், தகவல் தொழில்நுட்ப இயக்குனரகம் சார்பில், பே சாப்ட், போர்ட்டலில் தகவல் தொகுப்பு பதிவேற்றம் தொடர்பான, இரு நாட்கள் சிறப்பு பயிற்சி முகாம் நேற்று முன்தினம் துங்கியது.
தலைமை செயலகத்தில், நிறைவு நாள் சிறப்பு பயிற்சி முகாம் நேற்று நடந்தது. முகாமில், பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை, புதுச்சேரி தகவல் தொழில்நுட்ப இயக்குனரகம், பணியாளர்கள் நிர்வாக சீர்திருத்த துறையுடன் இணைந்து செய்தனர்.