/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
/
அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ADDED : நவ 05, 2025 11:52 PM

புதுச்சேரி: பெத்துசெட்டிப்பேட்டை பண்டிட் துரைசாமி அரசு உயர்நிலைப் பள்ளியில், அறிவியல் கண்காட்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியை உஷா வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக பள்ளிக் கல்வித் துறை துணை இயக்குநர் (பெண் கல்வி) ராமச்சந்திரன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி, அறிவியல் கண்காட்சியைத் வைத்து, மாணவர்கள் உருவாக்கிய படைப்புகளை பார்வையிட்டார்.
கண்காட்சியில், 300 மாணவர்கள் கலந்து கொண்டு தங்களின் அறிவியல், கணிதம், ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட தலைப்புகளில் படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர். நடுவராக விரிவுரையாளர் அனிதா செயல்பட்டு மாணவர்களின் படைப்புகளை மதிப்பீடு செய்து, முதல் மூன்று படைப்புகளை தேர்வு செய்தார். கண்காட்சியினை மாணவர்கள், பெற்றோர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
ஏற்பாடுகளை, பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

