/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துணை தாசில்தார் தேர்வு பணியில் ஊதிய முரண்பாடு: ஊழியர்கள் புலம்பல்
/
துணை தாசில்தார் தேர்வு பணியில் ஊதிய முரண்பாடு: ஊழியர்கள் புலம்பல்
துணை தாசில்தார் தேர்வு பணியில் ஊதிய முரண்பாடு: ஊழியர்கள் புலம்பல்
துணை தாசில்தார் தேர்வு பணியில் ஊதிய முரண்பாடு: ஊழியர்கள் புலம்பல்
ADDED : செப் 02, 2025 03:21 AM
புதுச்சேரி:அரசு சார்பில் நேற்று நடந்த துணை தாசில்தார் பணிக்கான தேர்வு பணியில் ஈடுபட்டவர்களுக்கு முரண்பாடாக ஊதியம் வழங்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வருவாய் துறையில் காலியாக உள்ள 30 துணை தாசில்தார் பணியிடங்கள் எழுத்து தேர்வு அடிப்படையில் நிரப்ப பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அறிவிப்பு வெளியிட்டது. இப்பணிக்கு மொத்தம் 37,349 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களுக்கான தேர்வு நேற்று முன்தினம் 101 மையங்களில் நடந்தது. இத்தேர்வில் 24,62௦ பேர் பங்கேற்றனர். இத்தேர்வு பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், யூ.டி.சி., எல்.டி.சி., மற்றும் பல்நோக்கு ஊழியர்கள் என 3,500க்கு மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் 500 போலீசார் ஈடுபட்டனர்.
தேர்வு முடிந்ததும், தேர்வு பணியில் ஈடுபட்டவர்களுக்கு, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பில் சம்பளம் வழங்கப்பட்டது. அதில், 'சி' பிரிவு ஊழியர்களான யூ.டி.சி., மற்றும் எல்.டி.சி., களுக்கு ரூ.600ம், 'டி' பிரிவான பல்நோக்கு ஊழியர்களுக்கு ரூ.1,200 வழங்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய முரண்பாடு ஊழியர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.