/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரஷ்ய மொழி சினிமா நாளை திரையிடல்
/
ரஷ்ய மொழி சினிமா நாளை திரையிடல்
ADDED : டிச 21, 2024 05:39 AM
புதுச்சேரி புதுச்சேரியில், ரஷ்ய மொழி சினிமாவை கண்டு ரசிக்க பார்வையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி திரை இயக்கம் ஆவண, குறும்படம் மற்றும் விருது பெற்ற சினிமாக்களை திரையிட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக அலையன்ஸ் பிரான்சிஸ் நிறுவனத்துடன் இணைந்து 'மாஸ்டர்ஸ் அண்டு மாஸ்டர் பீஸ்' எனும் தலைப்பில், சர்வதேச அளவில் விருது பெற்ற, பல்வேறு நாடுகளை சேர்ந்த, தரமான சினிமாக்கள் திரையிடப்பட்டு வருகின்றன.
இதுவரை மொத்தம், 7 நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன. 8வது நிகழ்வாக நாளை 22ம் தேதி மாலை 6:00 மணிக்கு, ரஷ்ய மொழி சினிமா 'லவ்லெஸ்' திரையிடப்பட உள்ளது. பார்வையாளர்கள் புரிந்து கொள்ள ஆங்கில சப்-டைட்டிலுடன் திரையிடப்படுகிறது. அனுமதி இலவசம்.
முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, இயக்குநர் சிவக்குமார் மோகனன் பங்கேற்கும் சினிமா தொடர்பான கலந்துரையாடல் நடக்கிறது.

