/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆன் லைனில் 5 பேரிடம் ரூ.3.66 லட்சம் 'மோசடி'
/
ஆன் லைனில் 5 பேரிடம் ரூ.3.66 லட்சம் 'மோசடி'
ADDED : மார் 09, 2024 02:50 AM
புதுச்சேரி: புதுச்சேரியை சேர்ந்த மீனாட்சி என்பவரது வங்கி கணக்கில் இருந்து, 13 ஆயிரம் ரூபாயை சைபர் கிரைம் கும்பல் எடுத்துள்ளது. சிவனேஸ்வரன் என்பவரிடம் இன்ஸ்ட்ரா கிராம் மூலம் தொடர்பு கொண்ட நபர், கப்பலில் வேலை இருப்பதாக கூறி, 88 ஆயிரம் ரூபாயை அபகரித்துள்ளார்.
திருமால் என்பவரிடம் வாட்ஸ் ஆப்பில், தொடர்பு கொண்ட நபர், ஆன்லைன் மூலம் போலி லாட்டரி சீட் வழங்கி, பணம் விழுந்ததாக கூறினார். அதை நம்பி, அவர், முன்பணமாக 1.67 லட்சம் அனுப்பி ஏமார்ந்தார். மோகன்ராஜ் என்பவரின் வங்கி கணக்கில் 70 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளனார்.
விக்னேஷ்குமார் என்பவர், பகுதி நேர வேலை இருப்பதாக கூறிய நபரை நம்பி, 28 ஆயிரம் அனுப்பி ஏமார்ந்தார்.
சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

