/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ. 2 கோடி மதிப்புள்ள கோவில் இடம் மீட்பு
/
ரூ. 2 கோடி மதிப்புள்ள கோவில் இடம் மீட்பு
ADDED : செப் 26, 2024 03:05 AM
நாகப்பட்டினம்: சிக்கல் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த நவநீதேஸ்வரர் சுவாமி கோவிலுக்கு சொந்தமான குடியிருப்புளை இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் மீட்டனர்.
நாகை அடுத்த சிக்கலில் பிரசித்தி பெற்ற நவநீதேஸ்வரர் கோவிலில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, கோவில் மட விளாகத்தில் 14 குடியிருப்புகள் உள்ளன. இதில் 5 குடியிருப்புகளை தனியார் சிலர் ஆக்கிரமித்து வைத்திருந்தனர். குடியிருப்புகளில் இருந்து வெளியேறுமாறு கோவில் நிர்வாகம் பல முறை அறிவுறுத்தியும் ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற மறுத்ததால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நீதிமன்ற உத்தரவுப்படி, அறநிலையத் துறை துணை ஆணையர் ராணி தலைமையிலான அலுவலர்கள் 2.30 கோடி ரூபாய் மதிப்புடைய, 5 குடியிருப்புகளை மீட்டு, சீல் வைத்தனர்.

