/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துணை தாசில்தார் தேர்வு ஒத்தி வைக்க கோரிக்கை
/
துணை தாசில்தார் தேர்வு ஒத்தி வைக்க கோரிக்கை
ADDED : ஆக 24, 2025 06:30 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் துணை தாசில்தார் தேர்வை அரசு தள்ளி வைக்க வேண்டும் என, புதுச்சேரி சுதந்திர பொன்விழா நகர் குடியிருப் போர் நல்வாழ்வு சங்கம் தலைவர் எட்வர்டு சார்லஸ் வலியுறுத்தியுள் ளார்.
அவரது அறிக்கை:
புதுச்சேரியில் வரும் 22, 23, 24, 30, 31 ஆகிய தேதிகளில் யூ.பி.எஸ்.இ., தேர்வுகள் நடக்கிறது. புதுச்சேரி மாநிலத்தில் நீண்ட இடைவேளிக்கு பின், துணை தாசில்தார் பணிக்கான தேர்வு வரும் 31ம் தேதி நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் யூ.பிஎஸ்.இ., மற்றும் துணை தாசில்தார் ஆகிய இரண்டு தேர்வுகளும் இளைஞர்களை பொருத்தவரை மிக முக்கியமான தேர்வுகள் என்பதால், புதுச்சேரி கவர்னர், முதல்வர் இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, புதுச்சேரி அரசால் நடத்தப்படும் துணை தாசில்தார் தேர்வை ஒத்தி வைத்து மறு தேதியில் நடத்த அறிவிக்க வேண்டும் என, புதுச்சேரி சுதந்திர பொன்விழா நகர் குடியிருப்போர் நல்வாழ்வு சங்கம் சார்பில், கேட்டுக் கொள்கிறோம்.