/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராமரின் அவதார தர்ம அனுஷ்டானம் வேளுக்குடி கிருஷ்ணன் உபன்யாசம்
/
ராமரின் அவதார தர்ம அனுஷ்டானம் வேளுக்குடி கிருஷ்ணன் உபன்யாசம்
ராமரின் அவதார தர்ம அனுஷ்டானம் வேளுக்குடி கிருஷ்ணன் உபன்யாசம்
ராமரின் அவதார தர்ம அனுஷ்டானம் வேளுக்குடி கிருஷ்ணன் உபன்யாசம்
ADDED : நவ 15, 2025 05:46 AM

புதுச்சேரி: ராமரின் அவதார தர்ம அனுஷ்டானம் குறித்து வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி உபன்யாசம் செய்தார்.
ராமானுஞரின் 1008ம் ஆண்டு வைபவத்தை முன்னிட்டு, கிஞ்சித்காரம் அறக்கட்டளையின் புதுச்சேரி கிளை மற்றும் லாஸ்பேட்டை விவே கானந்தா மேல்நிலைப் பள்ளி நிர்வாகம் இணைந்து நடத்தும் மூன்று நாள் சிறப்பு உபன்யாசம் நேற்று துவங்கியது.
புதுச்சேரி லாஸ்பேட்டை, இ.சி.ஆரில் உள்ள விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி உள் அரங்கில் மாலை 6:30 மணிக்கு துவங்கிய முதல் நாள் உபன்யாசத்தில், 'ஹரே ராம' என்ற தலைப்பில் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி உபன்யாசம் செய்தார். அப்போது, ராம கிருஷ்ண ஹரி அவதாரங்களில் ராமரின் அவதார தர்ம அனுஷ்டானம், கர்ம யோகம் ஆகியவற்றை விளக்கி, அவை ராமாயண காவியத்தில் எவ்வாறு விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது என்பதனை விளக்கினார்.
முன்னதாக மாலை 5:30 மணி முதல் 6:30 மணிவரை புதுச்சேரி ஜெகதீசன் குழுவினரின் நாமசங்கீர்த்தனம் நடந்தது. இரண்டாம் நாளாக இன்று மாலை 'ஹரே கிருஷ்ண' எனும் தலைப்பில் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி உபன்யாசம் செய்கிறார். அனுமதி இலவசம்.
உபன்யாசம் குறித்து தகவல் பெற விரு ம்புவோர் 94869 71962, 94430 85334, 88256 11581 ஆகிய மொபைல் போன் எண்களை தொடர்பு கொள்ளலாம்.

