தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பி.ஒய் 01 டி.ஜி., வரிசை பேன்சி எண்கள் ஏலம்

 பி.ஒய் 01 டி.ஜி., வரிசை பேன்சி எண்கள் ஏலம்

 பி.ஒய் 01 டி.ஜி., வரிசை பேன்சி எண்கள் ஏலம்


ADDED : ஏப் 22, 2026 05:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2026 05:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: போக்குவரத்துத் துறையின் பி.ஒய் 01 டி.ஜி., வரிசையில் உள்ள பேன்சி எண்களுக்கான ஏலம் வரும் 27ம் தேதி நடக்கிறது.

இதுகுறித்து போக்குவரத்து ஆணையர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரி போக்குவரத்து துறையின் பி.ஒய் 01 டி.ஜி., வரிசையில் உள்ள எண்களை https://parivahan.gov.in/fancy என்ற இணைய தளத்தில் வரும் 22ம் தேதி காலை 11 மணி முதல் மாலை 4:30 மணி வரை ஏலம் விட இருக்கிறது.

ஏலத்தில் பங்கு பெறுவதற்கு தேவையான பெயர் மற்றும் கடவு சொல்லை https://parivahan.gov.in/fancy என்ற இணையதளத்தில் நியூ பப்ளிக் யூசர் மூலமாக இன்று (22ம் தேதி) முதல் 26ம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு பதிவு செய்தவர்கள் மட்டுமே 27ம் தேதி நடக்கும் ஏலத்தில் பங்கு பெறலாம். அதற்கான வழிமுறைகள் மற்றும் ஏல நிபந்தனைகளை இன்று (22ம் தேதி) முதல் https://transport.py.gov.in என்ற இணையதள முகவரியில் பார்த்தும், பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம்.

இது சம்பந்தமான இதர விவரங்களை போக்குவரத்துத்துறை அலுவலகத்தின் 0413- 2280170 தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட எண் முன்பதிவு செய்யப்பட்ட வாகனம், அந்த எண்ணை முன்பதிவு செய்த நாளிலிருந்து 90 நாட்களுக்குள் பதிவு செய்ய தவறினால், அத்தகைய முன்பதிவு செயலிழந்துவிடும். அவருக்கு ஒதுக்கப்பட்ட எண் அவரது உரிமையை இழந்துவிடும்.

ஏலம் சம்பந்தப்பட்ட பண பரிவர்த்தனை அனைத்தும் 'ஆன்லைன் பேமண்ட்' வாயிலாக மட்டும் பெறப்படும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us