/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தெற்காசிய நாடுகள் நட்புணர்வு முகாம் புதுச்சேரி பிரதிநிதிகள் பங்கேற்பு

ADDED : டிச 19, 2025 05:27 AM

புதுச்சேரி: தெற்காசிய நாடுகள் நட்புணர்வு முகாமில் பங்கேற்று புதுச்சேரி பிரதிநிதிகள் நேற்று முன்தினம் திரும்பினர்.
ஒடிசா மாநிலம் கோபால்பூரில் நடந்த தெற்காசிய நாடுகள் நட்புணர்வு மற்றும் அமைதி முகாமில் இந்தியாவின் அசாம், மேற்கு வங்கம், சத்தீஸ்கர், டில்லி, குஜராத் , ஹரியானா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், புதுச்சேரி, தமிழ்நாடு, பஞ்சாப், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, கர்நாடகா உள்ளிட்ட இந்திய மாநில பிரதிநிதிகள், தெற்காசிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டின் நோக்கம் பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பர்மா ஆகிய தெற்காசிய நாடுகளுடன் இந்திய நாடு அமைதியையும், நட்புணர்வையும் உருவாக்குவதே. இந்த தெற்காசிய நாடுகள் அமைதி மற்றும் நட்புணர்வு முகாமில் இந்திய பிரதிநிதிகளாக புதுச்சேரியை சேர்ந்த தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆதவன், மாநில அரசின் சிறந்த மகளிர் விருது பெற்ற ஜெயப்பிரதா ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் நேற்று முன்தினம் புதுச்சேரி திரும்பினர்.