ஐரோப்பாவிற்கு ஏற்றுமதியாகும் புதுச்சேரி முட்ட கனவாய் மீன்கள்
ஐரோப்பாவிற்கு ஏற்றுமதியாகும் புதுச்சேரி முட்ட கனவாய் மீன்கள்
UPDATED : அக் 28, 2026 04:17 AM
ADDED : அக் 27, 2026 08:37 PM

புதுச்சேரி: கடலில் கிடைக்கும் முட்ட கனவாய் மீன்களை ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்ய, கேரளாவை சேர்ந்த நிறுவனங்கள் வாங்கி சென்றன.
வெளி நாடுகளில் கட் பிஷ் என, அழைக்கப்படும் முட்ட கனவாய் மீன்கள், சீசன் தற்போது துவங்கியள்ளது. புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். மீனவர்களின் வலையில், முட்ட கனவாய் மீன்கள் அதிகளவில் கிடைத்து வருகின்றன.
ஒவ்வொரு மீனும் ஒரு கிலோ எடையுள்ளது. இந்த மீன்கள் தேங்காய்த்திட்டு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. மூன்று டன்னுக்கு மேல் கிடைத்த இந்த மீன்களை, கேரளாவை சேர்ந்த மீன் ஏற்றுமதி நிறுவனம் இந்த மீன்களை, மீனவர்களிடம் இருந்து 1 கிலோ 500 ரூபாய்க்கு வாங்கி லாரிகள் மூலம் ஏற்றுமதி செய்தனர்.
ஏற்றுமதி செய்யப்பட்ட மீன்களை, கேரளாவில் சுத்தம் செய்த பின், (ப்ரோசன்) குளிர்விக்கப்பட்டு, அங்கிருந்து, ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. புரோட்டீன் சத்துகள் நிறைந்த இந்த மீன்களை குளிர்பிரதேச நாடுகளில் உள்ள மக்கள் விரும்பி அதிகளவில் வாங்குவர்.
