/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேர்தலுக்கான அறிவிப்பு வெளியீடு
/
தேர்தலுக்கான அறிவிப்பு வெளியீடு
ADDED : மார் 21, 2024 12:29 AM
புதுச்சேரி : புதுச்சேரி லோக்சபா தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன், தேர்தல் அறிவிப்பை முறைப்படி நேற்று வெளியிட்டார்.
புதுச்சேரி லோக்சபா தொகுதிக்கு தேர்தல் அடுத்த மாதம் நடக்கும் என, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் தேர்தல் அறிவிப்பு முறைப்படி 20ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று புதுச்சேரி லோக்சபா தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன் தேர்தல் அறிவிப்பினை வெளியிட்டார்.
அதில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி லோக்சபா தொகுதிக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.
வேட்பாளர் அல்லது அவரது பெயரை முன்மொழிபவர்களில் ஒருவர், தேர்தல் நடத்தும் அதிகாரி அல்லது அவர் இல்லாதபட்சத்தில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் துணை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம், கலெக்டர் அலுவலகத்தில் வரும் 27ம் தேதிக்குள் காலை 11:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை வேட்பு மனுவினை கொடுக்கலாம்.
இதே அலுவலகத்தில் வேட்பு மனுவிற்கான படிவம் கிடைக்கும். வேட்பு மனுக்கள் 28ம் தேதி காலை 11:00 மணிக்கு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும். வேட்பாளர் அல்லது அவரது பெயரை முன்மொழிபவர்களில் ஒருவர் அல்லது வேட்பாளரால் எழுத்து மூலம் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள அவரது தேர்தல் முகவர், வேட்பாளர் தேர்தல் விலகல் அறிவிப்பினை அதிகாரிகளிடம் எவரிடத்திலும் 30ம் தேதி மாலை 3:00 மணிக்குள் கொடுத்துவிடலாம்.
தேர்தலில் போட்டியிருந்தால் அடுத்த மாதம் 19ம் தேதி காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை ஓட்டெடுப்பு நடத்தப்படும்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

