/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பயனாளிகளுக்கு வீடு கட்டநிதி வழங்கல்
/
பயனாளிகளுக்கு வீடு கட்டநிதி வழங்கல்
ADDED : ஆக 24, 2025 06:51 AM

வில்லியனுார் : வில்லியனுார் தொகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு கல் வீடு கட்டுவதற்கு தவணை தொகைக்கான ஆணையை சிவா எம்.எல்.ஏ., வழங்கினார்.
புதுச்சேரிகுடிசை மாற்று வாரியம் சார்பில்,காமராஜர் கல்வீடு கட்டும் திட்டத்தில் கடந்த 2010-11ம் ஆண்டில் முதல் தவணைத் தொகை பெற்று வீடு கட்டிய58 பயனாளிகளுக்கு இரண்டு மற்றும் மூன்றாம் தவணைத் தொகை ரூ. 17 லட்சத்திற்கான ஆணையைசிவா எம்.எல்.எ.,வழங்கினார்.
நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரிய இளநிலை பொறியாளர் அனில்குமார்,கள ஆய்வாளர் இளங்கோவன்,தொகுதி தி.மு.க., நிர்வாகிகள்மணிகண்டன், ராமசாமி, செல்வநாதன், தர்மராஜ், ரமணன், குணசேரன், அங்காளன், சரவணன்,கோபி,காசிநாதன்,கதிரவன்,ஹரிகிருஷ்ணன், ஜெகன்மோகன்,கந்தசாமி,ஏழுமலை உட்பட பலர் பங்கேற்றனர்.