/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இளநிலை கணக்கு அதிகாரிகள் 12 பேருக்கு பதவி உயர்வு
/
இளநிலை கணக்கு அதிகாரிகள் 12 பேருக்கு பதவி உயர்வு
ADDED : பிப் 09, 2024 05:29 AM
புதுச்சேரி: இளநிலை கணக்கு அதிகாரிகள் 12 பேருக்கு முதுநிலை கணக்கு அதிகாரியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு துறைகளில் பணியாற்றும் கண்காணிப்பாளர்களுக்கு துறை ரீதியான பதவி உயர்வு அளிக்கும்போது கணக்கு அல்லது நிர்வாக பிரிவினை தேர்வு செய்ய வேண்டும். அதன்படி, கணக்கு பிரிவினை தேர்வு செய்து இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய 12 இளநிலை கணக்கு அதிகாரிகள் முதுநிலை கணக்கு அதிகாரியாக பதவி உயர்வு அளித்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கூடுதல் வேளாண் துறை அலுவலக கணக்கு அதிகாரி பிரேமா கால்நடை துறைக்கும், நில அளவை துறை கணக்கு அதிகாரி ராஜேஸ்வரி மகளிர் குழந்தைகள் மேம்பாட்டு துறைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி கணக்கு மற்றும் கருவூலத் துறை இளநிலை கணக்கு அதிகாரி ஜெகன்நாதன், மாகி கணக்கு மற்றும் கருவூலத் துறை இளநிலை கணக்கு அதிகாரி சுதிஷ், காரைக்கால் கணக்கு மற்றும் கருவூலத் துறை இளநிலை கணக்கு அதிகாரி முகமது ஜாபர் மரைக்காயர் ஆகியோர் அங்கேயே துணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொதுப்பணித் துறை சுகாதார கோட்ட இளநிலை கணக்கு அதிகாரி ஷாஜகான் ெஷய்க் புதுச்சேரி கணக்கு கருவூலத் துறை துணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை நிதித் துறை துணை செயலர் ரத்னாகோஷ் கிேஷார் பிறப்பித்துள்ளார்.
37 பேர் இடமாற்றம்:
இதேபோல் பல்வேறு துறைகளில் பணியாற்றும் 36 அசிஸ்டண்ட், 1 யூ.டி.சி., உள்பட 37 பேர் பல்வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை நிர்வாக சீர்த்திருத்த துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் பிறப்பித்துள்ளார்.

