/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் போராட்டம் சான்று பெறுவதில் சிக்கல்
/
புதுச்சேரியில் போராட்டம் சான்று பெறுவதில் சிக்கல்
ADDED : செப் 03, 2025 02:35 AM

புதுச்சேரி:புதுச்சேரியில், நகராட்சி மற்றும் கொம்யூன் ஊழியர்களின் தொடர் போராட்டத்தால், பிறப்பு, இறப்பு சான்று பெற முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
புதுச்சேரி அரசின் உள்ளாட்சி துறையினர் கீழ் உள்ள நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி கடந்த 25ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலாளர் முதல் கடைநிலை ஊழியர்களான துப்புரவு பணியாளர்கள் வரை ஒட்டுமொத்தமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பிறப்பு, இறப்பு, திருமண சான்று பதிவு சான்று பெற முடியாமல், பொதுமக்கள் அல்லாடி வருகின்றனர்.
நேற்று முன்தினம் முதல்வர் நடத்திய பேச்சவார்த்தையில், 33 மாத நிலுவைத் தொகை உடன் வழங்குவதாகவும், பிற கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றுவதாக கூறினார். அதனை ஏற்றுக் கொண்ட போராட்டக்குழுவினர், நிலுவை தொகை வழங்குவதற்கான அரசாணை வெளியிடும் வரை போராட்டம் தொடரும் என்றனர். அதன்பேரில் நேற்று 9ம் நாளாக காத்திருப்பு போராட்டம் தொடர்ந்தது.