/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில நீச்சல் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
/
மாநில நீச்சல் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
மாநில நீச்சல் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
மாநில நீச்சல் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
ADDED : நவ 27, 2025 04:35 AM

வில்லியனுார்: வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரியில் நடந்த மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரி மற்றும் புதுச்சேரி பல்கலைக் கழகம் ஆகியன இணைந்து கல்லுாரி மாணவர்களுக்கு மாநில அளவிலான நீச்சல் போட்டியை நடத்தின. மருத்துவ கல்லுாரி வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நடந்தபோட்டியை புதுச்சேரி பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் சந்தனா துவக்கி வைத்தார்.
புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த 18அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். ஆண் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளில் தனித்தனியாக போட்டிகள் நடந்தது. போட்டியில்ப்ரீ ஸ்டைல், பட்டர்பிளை ஸ்டோக், பேக் வேர்ட்டு ஸ்டைல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நடந்தது.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவ கல்லுாரி இயக்குனர் ரத்தினசாமி பரிசுகளை வழங்கி, பாராட்டினார். கல்லுாரி பொதுமேலாளர் சவுந்தரராஜன், சிறப்பு அதிகாரி ரமேஷ் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை வெங்கடேஸ்வரா கல்விக் குழுமத்தின் உடற்கல்வி இயக்குனர் ராஜவேலு மற்றும் உடற்பயிற்சி இயக்குனர்கள் செய்திருந்தனர்.

