/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரதமரின் வீடு கட்டும் திட்டம் துவக்க விழா
/
பிரதமரின் வீடு கட்டும் திட்டம் துவக்க விழா
ADDED : ஜன 28, 2026 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: காமராஜர் நுாற்றாண்டு வீட்டு வசதி திட்டம் மற்றும் பிரதமரின் வீடு கட்டும் திட்டம் (நகரம்) - 2.0துவக்க விழா நடந்தது.
புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் நேற்று நடந்த விழாவை, கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார்.
முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கினார். சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, அமைச்சர்கள், லட்சுமிநாராயணன், திருமுருகன் முன்னிலை வகித்தனர்.
விழாவில், எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, பாஸ்கர், தலைமை செயலர் சரத்சவுகான், செயலர் கேசவன், தலைமை நகர அமைப்பாளர் வீரசெல்வன், குடிசை மாற்று வாரிய முதன்மை அலுவலர் ரவிச்சந்திரன், அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

