/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பார் சப்ளையர் இறப்பில் சந்தேகம் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
/
பார் சப்ளையர் இறப்பில் சந்தேகம் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
பார் சப்ளையர் இறப்பில் சந்தேகம் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
பார் சப்ளையர் இறப்பில் சந்தேகம் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
ADDED : செப் 30, 2025 07:52 AM

புதுச்சேரி: பார் சப்ளையர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள், வி.சி.கட்சியினர் உருளையன்பேட்டை போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவராந்தகம் பேட், பள்ளிக்கூட வீதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 40; திருமணம் ஆகவில்லை. இவர் கடந்த 3 ஆண்டுகளாக புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள கவுதம் பாரில் சப்ளையராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் ராமமூர்த்தி பெஸ்ட் ஓயின்ஷாப் அருகே மயங்கி கிடப்பதாக அவரது அண்ணன் சிவசுப்ரமணியனுக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து, அவர் அங்கு சென்று பார்த்தபோது ராமமூர்த்தி கண்ணில் ரத்தம் கசித்த நிலையில் கிடந்துள்ளார். உடன் அவரை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ராமமூர்த்தி பரிசோதனை செய்த டாக்டர், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
ராமமூர்த்தி சாவில் சந்தேகம் இருப்பதாக சிவசுப்ரமணியன் உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் சந்தேகம் மரணம் பிரிவில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், அவரது உறவினர்கள் மற்றும் வி.சி., கட்சியினர் உருளையன்பேட்டை போலீஸ் ஸ்டேஷனை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில் சாவில் சந்தேகம் இருப்பதால் உடன் வேலை செய்த ஊழியர்களை விசாரிக்கவேண்டும் என வலியுறுத்தினர்.
அப்போது, சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் ராமமூர்த்தில அவர்களிடம் பிரேத பரிசோதனை முடிவுகள் வந்தபின், மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அதையேற்று கலைந்து சென்றனர்.

