ADDED : பிப் 11, 2026 04:15 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் போலீஸ் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.
புதுச்சேரி காவல் துறையில் காலியாக உள்ள போலீஸ் -148 (ஆண்கள் -100, பெண்கள்- 48) பணிக்கான உடல் தகுதித்தேர்வு நடந்து முடிந்தது. இதில், மொத்தம் 1,843 பேர் எழுத்துத்தேர்வுக்கு தகுதி பெற்றனர். இவர்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த 8ம் தேதி நடந்தது. அன்று இரவு 'ஆன்சர் கீ' வெளியிடப்பட்டது.
இதற்கான தேர்வு முடிவு நேற்று இரவு https://recruitment.py.gov.in/ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி, மோகனசுந்தரம் 111.50 மதிப்பெண் பெற்று முதலிடமும், பிரதீப் ராஜ் 98.50 மதிப்பெண்ணுடன் 2வது இடமும், அஜய் 97.25 மதிப்பெண் பெற்று 3வது இடமும் பிடித்தனர்.
பெண்கள் பிரிவில் அகிலா 99.25 மதிப்பெண் பெற்று முதலிடமும், சுபஸ்ரீ 89.25 மதிப்பெண்ணுடன் 2வது இடமும், வரலட்சுமி 82.50 மதிப்பெண்ணுடன் 3வது இடத்தையும் பிடித்தனர்.இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கான தேதி விரைவில் வெளியிடப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை புதுச்சேரி தேர்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் செயலாளர் பங்கஜ்குமார்ஜாதெரிவித்துள்ளார்.
