/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு
/
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு
ADDED : ஆக 24, 2025 07:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் போக்சோ வழக்குப் பதிந்தனர்.
புதுச்சேரி, கொம்பாக்கம் பேட் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார், 30. இவர், 17 வயது சிறுமியை திருமணம் செய்ததாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கு தகவல் கிடைத்தது.
அவரது விசாரணையில் சிறுமியுடன் திருமணம் நடந்தது உறுதியானது. இதனையடுத்து மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை உதவி இயக்குனர் ஜெயபிரியா, வில்லியனுார் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் சிறுமியை திருமணம் செய்த உதயகுமார் மீது போலீசார் போக்சோ வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வரு கின்றனர்.