கம்பி வேலி போடுங்கப்பா... இல்லைன்னா 'ட்ராக்' காலிப்பா...
கம்பி வேலி போடுங்கப்பா... இல்லைன்னா 'ட்ராக்' காலிப்பா...
ADDED : ஏப் 16, 2026 04:38 AM

நம்ம ஊரு பசங்க நேஷனல் லெவல்ல மெடல் அடிச்சு, தடம் பதிக்கணும்னு தான் உப்பளம் இந்திரா காந்தி மைதானத்துல அந்த 400 மீட்டர் சிந்தட்டிக் ட்ராக்கைப் போட்டீங்க. 2021ல நம்ம பிரதமர் மோடியே நேர்ல வந்து, கேலோ இந்தியா திட்டத்துல 7 கோடி ரூபாய் ஒதுக்கி அடிக்கல் நாட்டுனப்போ, அப்பாடா.. நம்ம ஊரு அத்லெட் பசங்க இனி பட்டைய கிளப்புவாங்கன்னு எல்லாரும் குஷியானாங்க.
ஆனா இப்போ அங்க நடக்குற சீனைப் பாத்தா... மனசு பக்குன்னு இருக்குது. என்னப்பா நடக்குது அங்க என்கின்றனர் சிந்தட்டிக் ட்ராக்கினை பார்க்கும் உள்ளூர் விளையாட்டு வீரர்கள்....அவர்கள் புலம்புவதற்கு காரணம் இல்லாமல் இல்லை...
அவர்களே சொல்லறாங்க... கேளுங்க..
கோடி கோடியா செலவு பண்ணி 'சிந்தட்டிக் ட்ராக்' ரெடி பண்ணியாச்சு. ஆனா அதுக்கு ஒரு செக்யூரிட்டி' வேண்டாமா.. மைதானத்தைச் சுத்தி வேலியை ஆக்ரோஷமா பிடுங்கி எறிஞ்சது யாருன்னு தெரியல. இப்போ அந்த ட்ராக்ல நம்ம தடகள வீரர்கள் ஓடுறதை விட, நம்ம ஊரு நாட்டு நாய்கள் தான் ரிலே ரேஸ் ஓடிக்கிட்டு இருக்குதுங்க. நாய்கள் அந்த ட்ராக்ல படுத்து உருளுதுங்க...பசி எடுத்தா அந்தப் பல கோடி ரூபாய் ட்ராக்கை வாயால கடிச்சு குதறுதுங்க...
இதனை காணும் வீரர்கள் மைண்ட் வாய்ஸ் வேறு மாதிரியாக இருக்கிறது. சார்... நாங்க ஸ்பைக் ஷூ போட்டு ஓடுறதை விட, நாய் கடிச்சிராம இருக்கவும் தான் அதிகமா பிராக்டிஸ் பண்ண வேண்டியிருக்கு . இதுதான் நம்ம பசங்களோட நிலைமை.
முன்னாடி மைதானத்தைச் சுத்தி சூப்பரா இரும்பு வேலி இருந்துச்சு. அப்போ மைதானம் கண்ணு படாத கண்ணாடி மாதிரி பளபளன்னு இருந்துச்சு. இப்போ வேலி இல்லாததால, அது தடகள ஓடுதளம் மாதிரி இல்லாம, ஊருக்குள்ள இருக்குற காலி பிளாட் மாதிரி ஆயிடுச்சு.. அரசாங்கத்துக்கு ஒரு சின்ன வேண்டுகோள். அந்த 7 கோடி ரூபா மக்களோட வரிப் பணம்.. அதை இப்படியே நாய்க்கும், மாட்டுக்கும் தாரை வார்த்துடாதீங்க. சீக்கிரமா அந்த ட்ராக்கைச் சுத்தி ஒரு ஸ்ட்ராங்கான இரும்பு வேலியைப் போடுங்க. அப்போதான் நாய் உள்ள வராது, நம்ம ஊரு உசைன் போல்ட்களும் பயமில்லாம ஓடுவாங்க.
சிந்தட்டிக் ட்ராக் போட்டா மட்டும் போதாது பாஸ்... அதை ஒழுங்கா மெயின்டெய்ன்' பண்ணவும் தெரியணும். புதுச்சேரி அரசு மனசு வச்சா, நம்ம உப்பளம் மைதானத்தை மறுபடியும் ஒரு பக்கா ஸ்போர்ட்ஸ் ஹப்பா மாத்த முடியும் என்கின்றனர் விளையாட்டு வீரர்கள்.. செய்வீர்களா.....
