ADDED : அக் 05, 2024 11:12 PM

புதுச்சேரி: மணக்குள விநாயகர்இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.கல்லுாரி)ஆண்டுதோறும் வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது. கடந்த கல்வி ஆண்டுகளில் எம்.ஐ.டி.,கல்லுாரியில் டி.சி.எஸ்., சி.டி.எஸ்., உள்ளிட்ட பல முன்னணிநிறுவனங்களில் 715 பணி நியமன ஆணைகளை பெற்றுத்தந்துள்ளது.
அதையடுத்து ஹெக்சாவேர்நிறுவனம்சார்பில், வேலை வாய்ப்பு முகாம் கல்லுாரி வளாகத்தில் நடந்தது. ஹெக்சாவேர் நிறுவன மனிதவள மேலாளர்கள் வீரலட்சுமி, ஹரி கலந்து கொண்டு, நிறுவனத்தின்விவரங்கள், வேலைசெய்வதற்கு உண்டான சூழல்,எதிர்கால குறிக்கோள்கள், சம்பளம் குறித்து அனைத்துவிவரங்களையும்விளக்கினர்.
குழு விவாதம்மற்றும் நேர்முக தேர்வுஆகியசுற்றுக்களாக வேலைவாய்ப்பு முகாம்நடந்தது. நிகழ்ச்சிக்கு மணக்குளவிநாயகர் கல்வி குழுமதலைவர் தனசேகரன்,செயலாளர் நாராயணசாமிகேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர்.கல்லுாரிமுதல்வர் மலர்க்கண் முகாமினை துவக்கி வைத்தார். கல்லுாரிவேலைவாய்ப்பு துறைஅதிகாரி ஜெயக்குமார் மற்றும் அனைத்துதுறை வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்பங்கேற்றனர்.
முகாமில் எம்.ஐ.டி., கல்லுாரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவ,மாணவியர்200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, வேலைவாய்ப்பை பெற்றனர். ஏற்பாடுகளைகல்லுாரி வேலைவாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் செய்திருந்தார்.
