/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'பிட் இந்தியா' திட்ட விழிப்புணர்வு சைக்கிள் பேரணி: மத்திய அமைச்சர், கவர்னர், முதல்வர் பங்கேற்பு
/
'பிட் இந்தியா' திட்ட விழிப்புணர்வு சைக்கிள் பேரணி: மத்திய அமைச்சர், கவர்னர், முதல்வர் பங்கேற்பு
'பிட் இந்தியா' திட்ட விழிப்புணர்வு சைக்கிள் பேரணி: மத்திய அமைச்சர், கவர்னர், முதல்வர் பங்கேற்பு
'பிட் இந்தியா' திட்ட விழிப்புணர்வு சைக்கிள் பேரணி: மத்திய அமைச்சர், கவர்னர், முதல்வர் பங்கேற்பு
ADDED : டிச 22, 2025 05:31 AM

புதுச்சேரி: மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சகத்தின் பிட் இந்தியா திட்டத்தில் கீழ் 'சண்டேஸ் ஆள் சைக்கிள்ஸ்' இயக்கத்தின் முதலாம் ஆண்டு விழா சைக்கிள் பேரணி நேற்று காலை புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை அருகில் நடந்தது.
விழாவிற்கு மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமை தாங்கினார். கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி கொடியசைத்து சைக்கிள் பேரணியை துவக்கி வைத்தனர்.
பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள் என, 500 பேர் பங்கேற்ற இப்பேரணி, கடற்கரை சாலையில் துவங்கி அண்ணா சாலை, மறைமலை அடிகள் சாலை வழியாக மீண்டும் கடற்கரை சாலையை வந்தடைந்தது.
இறுதியாக, பிட் இந்தியா செயலி மூலம் அதிகதுாரம் சைக்கிள் ஓட்டி அதிக புள்ளிகள் எடுத்த மூவருக்கு மத்திய அமைச்சர், கவர்னர், முதல்வர் ஆகியோர் சைக்கிள்கள் வழங்கி கவுரவித்தனர்.
நிகழ்ச்சியில், சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், தலைமை செயலர் சரத் சவுகான், கேல் ரத்னா விருதாளர்கள் ராஜேஷ், சரத் கமல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன் பேசுகையில், 'உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பிரதமர் மோடி விடுத்த அழைப்பு தான் இந்த 'பிட் இந்தியா' இயக்கம். புதுச்சேரியில் இருந்து நிறைய பேர் பங்கெடுத்துள்ளனர். சைக்கிள் ஓட்டுவதால் குறைந்த செலவில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.
மத்திய அமைச்சரின் சொந்த ஊரான குஜராத் பாவ் நகர் கிராமத்தில் இருக்கும் சுமார் 4 ஆயிரம் பேரும் சைக்கிளை மட்டுமே பயன்படுத்துகின்றனர். வேறு இருசக்கர வாகனங்களை பயன்படுத்துவது இல்லை. இதுபோல, கிராமங்கள் தோறும் இத்திட்டத்தை உத்வேகத்தோடு செயல்படுத்த வேண்டும்.
காற்றில் கார்பன் அளவை நாம் வெகுவாக குறைக்க வேண்டும். அது பற்றிய விழிப்புணர்வை இந்தியாவில் ஏற்படுத்த வேண்டும்' என்றார்.

