ADDED : செப் 17, 2025 11:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ரெட்டியார்பாளையத்தில், ஆர்.பி.சி., அணி சார்பில், பெத்தாங் போட்டி நடந்தது.
ஆர்.பி.சி., அணி நிறுவனர் வளையாபதி நினைவாக, 3 பேர் கொண்ட குழுவாக, விளையாடும் பெத்தாங் போட்டி நடத்தப்பட்டது. முன்னதாக அணி வீரர்களுக்கு சீருடையை, செயலாளர் காமராஜ் வழங்கினார். போட்டி,ஒவ்வொரு சுற்றும் நாக் அவுட் முறையில் நடந்தது.
இறுதிப் போட்டி,கடந்த 6ம் தேதி நடந்தது.இதில் வேலு, சித்தாந், விஜய் ஆகியோர் பங்கேற்ற அணி முதல் பரிசும், செல்வம், ஆனந்த், சக்திவேல் ஆகியோர் பங்கேற்ற அணி இரண்டாம் பரிசும் பெற்றது. வெற்றிப்பெற்ற அணிகளுக்கு, விசாலி வளையாபதி பரிசு வழங்கினார். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.