/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பம்பை ஆற்றங்கரை பலப்படுத்தும் பணி
/
பம்பை ஆற்றங்கரை பலப்படுத்தும் பணி
ADDED : ஆக 23, 2025 07:11 AM

திருபுவனை : குச்சிப்பாளையம் பம்பை ஆற்றங்கரையை ரூ. 22.84 லட்சத்தில் பலப்படுத்தும் பணியை அங்காளன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்.
வில்லியனுார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலம் திருபுவனை தொகுதி, கலிதீர்த்தாள்குப்பம் மேற்கு கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட குச்சிப்பாளையம் கிராமத்தில் பம்பை ஆற்றங்கரை 100 நாள் வேலை திட்டத்தின் மூலம், 6 ஆயிரத்து 773 மனித வேலை நாட்களில், ரூ.22.84 லட்சம் செலவில் பலப்படுத்தப்பட உள்ளது.
இப்பணியை அங்காளன எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சீனிவாசன், வில்லியனுார் வட்டார வளர்ச்சி அதிகாரி தயானந்த் டெண்டுல்கர், உதவிப் பொறியாளர் ராமன், இளநிலைப் பொறியாளர் அஸ்வின்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பணி ஆய்வாளர் பரங்கராஜ், கிராம திட்ட ஊழியர் கருணாமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.