/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.2.20 கோடியில் மேல்நிலை தொட்டி அமைக்கும் பணி துவக்கி வைப்பு
/
ரூ.2.20 கோடியில் மேல்நிலை தொட்டி அமைக்கும் பணி துவக்கி வைப்பு
ரூ.2.20 கோடியில் மேல்நிலை தொட்டி அமைக்கும் பணி துவக்கி வைப்பு
ரூ.2.20 கோடியில் மேல்நிலை தொட்டி அமைக்கும் பணி துவக்கி வைப்பு
ADDED : பிப் 03, 2024 07:42 AM

பாகூர் : கன்னியக்கோவிலில் 2 கோடியே 20 லட்சம் ரூபாயில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணியை அமைச்சர் லட்சுமி நாராயணன், செந்தில்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தனர்.
பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்டம் சார்பில், பாகூர் தொகுதி, கன்னியக்கோவிலில் 2 கோடியே 20 லட்சம் ரூபாயில் 2. 50 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி, ஒரு லட்சம் லிட்டர் கொள்ளவு கீழ்நிலை நீர் தேக்க தொட்டி, போர்வெல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை நடந்தது. அமைச்சர் லட்சுமி நாராயணன், செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் பணிகளை துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் உமாபதி, இளநிலை பொறியாளர் சிவானந்தம், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர். இத்திட்டத்தின் மூலம் கன்னியக்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 7,500 பேர் பயனடைவர்.