தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆப்ரேஷன் திரிசூல் 8 பேர் கைது ; 75 பேர் மீது வழக்கு

 ஆப்ரேஷன் திரிசூல் 8 பேர் கைது ; 75 பேர் மீது வழக்கு

 ஆப்ரேஷன் திரிசூல் 8 பேர் கைது ; 75 பேர் மீது வழக்கு


ADDED : பிப் 25, 2026 05:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2026 05:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், ரவுடிகளை ஒழிக்க ஆப்ரேஷன் திரிசூல் திட்டம் துவங்கப்பட்டது.

அதன்படி, ரவுடிகளின்நடவடிக்கைகளை கண்காணிக்கும் பொருட்டு நேற்று அதிகாலை சீனியர் எஸ்.பி., கலைவாணன் உத்தரவின்பேரில் எஸ்.பி.,க்கள் வம்சித ரெட்டி, சுருதி, ஜிந்தா கோதண்டராமன், சுப்ரமணி ஆகியோர் தலைமையில் 255 போலீசார் நேற்று அதிகாலை புதுச்சேரி முழுதும் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.அதில், குற்ற பின்னணி உடைய 214 பேரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய 75 பேர் மீதுமுன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை வழக்கு பதிந்தனர்.மேலும், ஆபத்தான ஆயுதங்கள் வைத்திருந்த 7 பேர் மற்றும் போதை பொருட்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் என, எட்டு பேரை கைது செய்தனர்.

இதுகுறித்து சீனியர் எஸ்.பி., கலைவாணன் கூறுகையில், 'ஆப்ரேஷன் திரிசூல் நடவடிக்கை குற்றங்களை ஒழிக்க போலீசாரின் உறுதியான முயற்சி ஆகும். பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான போலீசாரின் உறுதியான அர்ப்பணிப்பை காட்டுகிறது' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us