/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எக்ஸ்க்ளூசிவ் அகாடமி சார்பில் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி
/
எக்ஸ்க்ளூசிவ் அகாடமி சார்பில் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி
எக்ஸ்க்ளூசிவ் அகாடமி சார்பில் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி
எக்ஸ்க்ளூசிவ் அகாடமி சார்பில் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி
ADDED : நவ 13, 2024 08:55 PM

புதுச்சேரி ; எக்ஸ்க்ளூசிவ் அகாடமி சார்பில் எக்ஸ்க்ளூசிவ் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் - 2024 போட்டி தி ஸ்காலர் பள்ளியில் நடந்தது.
தி ஸ்காலர் பள்ளி தலைவர் பழனிவேலு, அகாடமி இயக்குனர் சரஸ்வதி சுரேஷ், ஸ்காலர் ஸ்பெக்ட்ரா சுரேஷ் போட்டியை துவக்கி வைத்தனர் 6 முதல் 60 வயதினர் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போட்டியில் தலைமை ஆர்பிட்டர்களாக நாராயணன், சம்பத் செயல்பட்டனர்.
பெரியவர்கள் பிரிவில் பத்ரிநாத், பீட்டர் ஆனந்த், சுரேஷ்குமார், திருமாறன் ஆகியோர் முதல் நான்கு இடங்களை பிடித்தனர். இவர்களுக்கு முறையே ரூ.5,000, ரூ.4,000, ரூ.3,000 மற்றும் ரூ.2,000 பரிசு வழங்கப்பட்டது.
சுனில் தேவ், கோகுல், பத்மேஷ், நசிருல்லா ஆகியோர் தாலா ரூ.1,000, ரதீஷ், அருண்குமார், ராஜேஷ், குருசரண் ஆகியோர் தலா ரூ.500 பரிசு பெற்றனர்.
சிறுவர் பிரிவில், 8, 11, 14, 17 வயதினர் 20 பேருக்கு பரிசு கோப்பையும், ஆறுதல் பரிசாக 40 பேருக்கு பதக்கங்களும் மற்றவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டன.
பரிசுகளை ஸ்காலர் பள்ளியின் தலைவர் பழனிவேலு, அகடாமி இயக்குனர் சரஸ்வதி சுரேஷ், ஜோதி கண் பராமரிப்பு மையத்தின் நிறுவனர் டாக்டர் வனஜா வைத்தியநாதன், ஸ்காலர் ஸ்பெக்ட்ரா சுரேஷ் ஆகியோர் வழங்கினர்.
ப்ரீத்தி விஜயகுமார், பூங்கோதை மாரியப்பன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைந்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எக்ஸ்க்ளூசிவ் அகாடமியின் நிர்வாக அதிகாரி சக்திவேல் ராமன், தி ஸ்காலர் பள்ளி நிர்வாக அதிகாரி பிரபாகரன், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

