/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இறைவனை சரணாகதி அடைய வேண்டும் :ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
/
இறைவனை சரணாகதி அடைய வேண்டும் :ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
இறைவனை சரணாகதி அடைய வேண்டும் :ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
இறைவனை சரணாகதி அடைய வேண்டும் :ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
ADDED : ஜன 06, 2026 04:10 AM

புதுச்சேரி: எந்தச் செயலைச் செய்தாலும், அதை பெருமானின் விருப்பப்படி நாம் செய்கின்ற கருவியாகத் தான் உள்ளோம் என்று உணர்ந்தால், அதுவே பரம பக்தி ஆகின்றது என ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம் செய்தார்.
முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவில் மார்கழி திருப்பாவை மகோற்சவ உபன்யாசம் கடந்த 16ம் தேதி முதல் துவங்கி நடந்து வருகின்றது. நேற்று ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம் நிகழ்த்திய 21 ம் பாசுர உபன்யாசம்:
திருப்பாவையின் 21ம் பாசுரம் பகவானுடைய பெருமையைம், ஆசார்யர்களின் பெருமையையும் பேசும் பவித்ரமான, ஏற்றமான பாசுரம். இதில் நந்தகோபனின் கறவைச் செல்வ வளமையைச் சொல்லியுள்ளாளர். கண்ணனின் ஸ்பர்சத்தால் அன்றோ கறவைகள் எதிர் பொங்கி மீதளித்து குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்களாயின என்று குறிப்பில் உணர்த்தி, கண்ணனின் வண்மையையே சொல்லியுள்ளாள் என்பது பாசுரத்தின் பொதுவான பொருளாகும்.
இப்பாசுரத்தில் ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப என்று சொல்லி, நம் பக்தி என்ற பால் பொங்குவதாக ஆண்டாள் நாச்சியார் உணர்த்துவதாகவும் அனுபவிக்கலாம். வெறும் கடமையோ சடங்கோ பக்தி இல்லை. எந்தச் செயலைச் செய்தாலும், அதை எம்பெருமானின் விருப்பப்படி நாம் செய்கின்ற கருவியாகத் தான் உள்ளோம் என்று உணர்ந்தால், அதுவே பரம பக்தி ஆகின்றது.
பெரியாய் என்ற ஆண்டாளின் இப் பாசுரச் சொல்லுக்கு, மற்றைய உயர்வுகள் எல்லாம் உயர்வற்றுப் போகுமளவுக்கான உயர்வை உடையவன் என்றும் பொருள் கொள்ளலாம். அத்தகைய உயர்வை உடையவன் தன் அடியார்களுக்கென்று தன் அருள் பொழியக் கண்ணனாக வந்து சேர்ந்திருக்கிறான் என்பதே அவன் எளிமையை உணர்த்தும்.
மற்றச் சோதிகளைப் பல காரணங்களால் மறைக்கவும், அழிக்கவும் முடியும்.
ஆதியஞ் சோதியை மறைக்கவோ, அழிக்கவோ முடியா. ஆனால் கண்ணன் சூரியனைச் சக்கரம் கொண்டு மறைத்தான். சூரியனையும் மங்கச் செய்யும் சுடர் தானே தோற்றமாய் - அர்ச்சையாய் நின்ற சுடர்.
ஆகவே தான் இந்தச் சுடரை மனத்தில் வைத்து, ஞான ஒளி பெருகி, உன் சரணன்றி வேறு சரண் இல்லை என சரணாகதி பண்ண 'போற்றி யாம் வந்தோம்” என்று சொல்லியுள்ளாள்.
இவ்வாறு அவர் உபன்யாசம் செய்தார்.

