/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்

ADDED : ஆக 13, 2025 02:41 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் தெரு நாய்களின் தொல்லைகளை நீக்க இலவச தொலைபேசியை அரசு உடனடியாக நிறுவ வேண்டுமென அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநிலத் தலைவர் ஓம்சக்தி சேகர் அறிவுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
டில்லியில் தெரு நாய்களையும் பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும். அதனை தடுக்கும் அமைப்பின் மீது கடும் நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை பின்பற்றி பல மாநிலங்கள் தெரு நாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. புதுச்சேரியிலும் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து, பொது மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய உள்ளாட்சித் துறை அதிகாரிகள், விலங்கு நல ஆர்வலர்களை காரணம் காட்டி தங்கள் பணியை தட்டிக் கழித்து வந்தனர்.
தற்போது உச்சநீதிமன்றம், எந்த அமைப்பு இடையூறாக இருந்தாலும், அதைப்பற்றி கவலைப்படாமல் உடனடியாக தெருநாய்களை காப்பகங்களில் அடைக்கவும், காப்பகங்களில் இருந்து நாய்கள் வெளியேறாமல் இருப்பதை சம்பந்தப்பட்ட துறையினர் உறுதி செய்ய வேண்டும் என, தெரிவித்துள்ளது.
ஆகையால், புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு துறைகளுக்கு அவசர எண்கள் இருப்பது போன்று, தெரு நாய்களின் தொல்லைகளை நீக்க ஒரு இலவச தொலைபேசி எண்ணை உடனடியாக அரசு நிறுவ வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.