ADDED : ஜன 29, 2024 04:05 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி : குளியல் அறையில் வழுக்கி விழுந்த மூதாட்டி பரிதபமாக இறந்தார்.
புதுச்சேரி, ரெயின்போ நகர் 9வது குறுக்கு வீதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி, 65. இவர் நேற்று மதியம் 1:00 மணியளவில் வீட்டில் உள்ள குளியல் அறைக்கு சென்றபோது வழுக்கி விழுந்தார். அவரது மகன் மோகன்குமார், கலைச்செல்வியை மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
