ADDED : ஜன 02, 2026 04:45 AM
காரைக்கால்: காரைக்காலில் பைக் மீது லாரி மோதி செவிலியர் கல்லுாரி மாணவி இறந்தார்.
திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டம் செறுவல்லுார் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் மகள் சங்கவி, 19; சென்னையில் செவிலியர் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். புத்தாண்டு விடுமுறைக்கு வீட்டிற்கு வந்திருந்தார். அதேப் பகுதியை சேர்ந்தவர் தீபிகா.
நேற்று புத்தாண்டை யொட்டி, சங்கவி, தீபிகா இருவரும் உறவினர் சரண் என்பவருடன் பைக்கில் காரைக்கால் கடற்கரைக்கு சென்றனர். பின், மதியம் மூவரும் வீட்டிற்கு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தனர். மதகடி அரசலாறு பாலம் அருகில் வேகமாக வந்த லோடு லாரி, பைக் மீது மோதியது. இதில், சங்கவி நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த தீபிகா, சரண் ஆகியோர் அரசு மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நகர போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

