sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நர்சிங் மாணவி தற்கொலை 

 நர்சிங் மாணவி தற்கொலை 

 நர்சிங் மாணவி தற்கொலை 


ADDED : ஏப் 23, 2026 06:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2026 06:40 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சோலை நகரில் நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

முத்தியால்பேட்டை, சோலைநகரை சேர்ந்தவர் தினேஷ் மகள் நித்தியஸ்ரீ, 19; மதர் தெரசா நர்சிங் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை கல்லுாரி முடிந்து வீட்டிற்கு வந்து, தனது பாட்டி அம்பிகாவிடம் தனக்கு சோர்வாக இருப்பதாக கூறிவிட்டு, வீட்டின் அறைக்குள் சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார். இந்த நிலையில் இரவு 7 மணிக்கு வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த அவரது தாயார் கலைச்செல்வி தனது மகள் படுத்திருக்கும் அறையை தட்டினார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் அதிர்ச்சியடைந்த அவர் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு நித்தியஸ்ரீ துாக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். உடன் அவரை கீழே இறக்கி புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்ததை உறுதி செய்தனர்.

புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us