/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தந்தை கண்டித்ததால் நர்சிங் மாணவி தற்கொலை
/
தந்தை கண்டித்ததால் நர்சிங் மாணவி தற்கொலை
ADDED : ஜன 11, 2026 05:04 AM
அரியாங்குப்பம்: தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த நர்சிங் படித்த மகள் தற்கொலை செய்து கொண்டார்.
தவளக்குப்பம், இடையார்பாளையம், பாடசாலை வீதியை சேர்ந்தவர் ஐயனார் மகள் திவிஷ்யா, 19; கிருமாம்பாக்கம் தனியார் நர்சிங் கல்லுாரியில் பி. எஸ்சி., 3ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், திவிஷ்யா, பருவத்தேர்வில் குறைவாக மதிப்பெண் எடுத்தார். ஏன் தேர்வில் குறைவாக மதிப்பெண் எடுத்தாய் என, அவரது தந்தை கண்டித்தார். அதில், மனமுடைந்த, திவிஷ்யா, கடந்த 7ம் தேதி, பூச்சு கொல்லி மருந்தை குடித்தார்.
ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

