/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் தொழில் துவங்க.... புது நடைமுறை; குஜராத் மாடல் அமலுக்கு வருகிறது
/
புதுச்சேரியில் தொழில் துவங்க.... புது நடைமுறை; குஜராத் மாடல் அமலுக்கு வருகிறது
புதுச்சேரியில் தொழில் துவங்க.... புது நடைமுறை; குஜராத் மாடல் அமலுக்கு வருகிறது
புதுச்சேரியில் தொழில் துவங்க.... புது நடைமுறை; குஜராத் மாடல் அமலுக்கு வருகிறது
UPDATED : அக் 25, 2025 08:03 AM
ADDED : அக் 25, 2025 02:54 AM

புதுச்சேரி: குஜராத் மாநில மாடலில், புதுச்சேரி தொழிற்சாலைகளில் மூன்றாம் நபர் தணிக்கை அமலுக்கு வருகிறது. தொழிற்சாலைகளில் தீ பாதுகாப்பு மிகவும் அவசியமான ஒன்று. ஏனெனில் அங்கு சூடான இயந்திரங்கள், எரியக்கூடிய ஆபத்தான பொருட்கள், அதிக மின்சார பயன்பாடு போன்றவை தீ விபத்துகளை ஏற்படுத்தும் அபாயத்தை கொண்டுள்ளன. தீ விபத்துகளைத் தடுக்கவும், விபத்து ஏற்பட்டால் சேதத்தை குறைக்கவும், ஊழியர்களின் உயிரைப் பாதுகாக்கவும் சரியான தீ விபத்து தடுப்பதற்கான பாதுகாப்பு வழிமுறைகள் தொழிற்சாலைகளில் இருப்பது அவசியம்.
புதுச்சேரியை பொருத்தவரை, தொழிலாளர் துறையின் கீழ் இயங்கி வரும் தொழிற்சாலைகள் மற்றும் கொதிகலன்கள் தலைமை ஆய்வாளர் அலுவலம், தொழிற்சாலைகள் பாதுகாப்பு மற்றும் விதிமுறைகளுக்கு இணங்கி செயல்படுவதை உறுதி செய்து வருகிறது. அத்துடன் கொதிகலன்களின் மேற்பார்வை, ஆய்வு மற்றும் உரிமம் வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்கிறது.
இந்நிலையில், புதுச்சேரியின் தொழிற்சாலைகளின் தீ விபத்து தடுப்பு நிறுவதல் மற்றும் ஆலோசனைக்காக மூன்றாவது நபராக ஏஜென்சியை பயன்படுத்தப்பட உள்ளது. இதற்கான வழிகாட்டுதல் வழிமுறைகள், தலைமை செயலர் சரத் சவுகான் உத்தரவின்பேரில் உள்துறை வாயிலாக வெளியிடப்பட்டுள்ளன.
முக்கிய அம்சங்கள் தற்போது தொழிற்சாலைகளில் தீ விபத்து நடக்கும் வாய்ப்புள்ள இடங்களில் தீ தடுப்பு கருவிகள் வைத்தால் மட்டுமே உரிமம் தரப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த தீ கருவிகளை சரிபார்த்து புதுப்பிக்க வேண்டும். இந்த அணுகுமுறையில் புதிய நடைமுறை தற்போது புகுத்தப்பட உள்ளது.
தொழிற்சாலைகளில் ஆய்விற்கான தகுதி வாய்ந்த மூன்றாவது நபராக ஏஜென்சிகள் களம் இறக்கப்பட உள்ளன. விரைவில் இந்த ஏஜென்சிகள் கண்டறிந்து அறிவிக்கப்பட உள்ளன.
இந்த ஏஜென்சிகளிடம் தான் தொழிற்சாலைகள் இனி நேரடியாக அணுக வேண்டும். இந்த ஏஜென்சி தொழிற்சாலைகளை பார்வையிட்டு தீ தடுப்பு கருவிகளை எந்தந்த இடங்களில் வைக்கலாம் என ஆலோசனை வழங்கும். அந்த இடங்களில் தீ தடுப்பு கருவிகளை வைத்த பிறகு, மீண்டும் அந்த ஏஜென்சியின் பிரதிநிதிகள் ஆய்வு செய்து உறுதிப்படுத்தி, பரிந்துரை சான்றிதழ் வழங்குவர்.
அந்த சான்றிதழுடன் தீயணைப்பு துறைக்கு அனுமதி கேட்டு தொழிற்சாலைகள் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு தீயணைப்பு துறை அதிகாரிகள் மீண்டும் தொழிற்சாலைகளை ஆய்வு செய்தபின், என்.ஓ.சி., வழங்குவர். இந்த என்.ஓ.சி., மூன்றாண்டுகளுக்கு பொருந்தும்.
மூன்றாண்டுகள் முடிந்த பிறகு மீண்டும் ஏஜென்சி வாயிலாக தணிக்கை செய்து, தீயணைப்பு துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும். எளிதாக தொழில் துவங்குவதற்கு வசதியாக இந்த புதிய நடைமுறை புகுத்தப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை,குஜராத் மாநிலத்தில் ஏற்கனவே அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

