/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மியாட் மருத்துவமனை சிறப்பு நிபுணர்கள் 2ம் தேதி புதுச்சேரி, கடலுார் வருகை
/
மியாட் மருத்துவமனை சிறப்பு நிபுணர்கள் 2ம் தேதி புதுச்சேரி, கடலுார் வருகை
மியாட் மருத்துவமனை சிறப்பு நிபுணர்கள் 2ம் தேதி புதுச்சேரி, கடலுார் வருகை
மியாட் மருத்துவமனை சிறப்பு நிபுணர்கள் 2ம் தேதி புதுச்சேரி, கடலுார் வருகை
ADDED : பிப் 26, 2024 04:48 AM
புதுச்சேரி: மியாட் மருத்துவமனை சிறப்பு நிபுணர்கள் வரும் 2ம் தேதி புதுச்சேரி மற்றும் கடலுாரில் மருத்துவ ஆலோசனை வழங்குகின்றனர்.
சென்னை மியாட் மருத்துவமனை சார்பில் கதிர் வீச்சு புற்றுநோயியல் சிறப்பு நிபுணர் அரவிந்த்குமார், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் நடராஜன் ஆகியோர்வரும் 2ம் தேதி கடலுார் மற்றும் புதுச்சேரி வருகின்றனர். கடலுாரில் ஆற்காடு மருத்துவமனையில் காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளனர்.
தொடர்ந்து இருவரும் புதுச்சேரி ராஜிவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை பின்புறம் அமைந்துள்ள தி பாஷ் மருத்துவமனையில், மாலை 5:00 முதல், இரவு 9:00 மணி வரை ஆலோசனை வழங்க உள்ளனர்.
கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர் அரவிந்த்குமார் புற்றுநோய் குறித்து ஆலோசனை வழங்க உள்ளார்.
தோலுக்கு அடியில் கட்டி, எடையில் மாற்றங்கள், களைப்பு, தொடர் இருமல், சுவாச பிரச்னைகள், விழுங்குவதில் சிரமம், தொண்டைக்கட்டுதல், நீடித்த காலமாக தசை அல்லது மூட்டுவலி, விவரிக்க முடியாத ரத்தப்போக்கு அல்லது சிராய்ப்புகள், பெண்களுக்கான மார்பகக்கட்டி, கர்ப்பபை புற்றுநோய், அசாதாரண கருப்பை ரத்தப்போக்கு அல்லது வெளியேற்றம் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்கள் சிகிச்சை பெறலாம்.
இதேபோல் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் நடராஜன் மூளை மற்றும் முதுகு தண்டுவட நரம்பு கோளாறுகள் பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்க உள்ளார்.
தலைவலி, வாந்தி, வலிப்பு நோய், கீழ் முதுகு வலி, கீழ் பகுதி பக்கவாதம், கை, கால்கள் செயலிழக்கும் பக்கவாதம், முகம், கழுத்து, முதுகு நரம்பு கோளாறுகள், மூளை முதுகு தண்டுவட கட்டிகள், உடல் உறுப்புகளின் பலவீனம், மறதி நோய், முடக்கு வாதம், உடல் நடுக்கம், அசாதாரண இயக்கங்கள், குடும்ப வரலாற்றில் பக்கவாத நோய் உள்ளிட்ட அறிகுறி உள்ளவர்கள் ஆலோசனை பெறலாம்.
முகாமிற்கு வரும்போது முந்தைய மருத்துவ பதிவுகள் இருந்தால் கொண்டு வர வேண்டும். முன் பதிவு அவசியம்.
ஆலோசனை கட்டணம்-300 ரூபாய். முன்பதிவுக்கு 75400-44741, 98412-68500 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

