/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிராமங்களுக்கு இடையே கிரிக்கெட் போட்டி கோப்பையை வென்ற மூ.புதுக்குப்பம் அணி
/
கிராமங்களுக்கு இடையே கிரிக்கெட் போட்டி கோப்பையை வென்ற மூ.புதுக்குப்பம் அணி
கிராமங்களுக்கு இடையே கிரிக்கெட் போட்டி கோப்பையை வென்ற மூ.புதுக்குப்பம் அணி
கிராமங்களுக்கு இடையே கிரிக்கெட் போட்டி கோப்பையை வென்ற மூ.புதுக்குப்பம் அணி
ADDED : ஜூலை 30, 2025 11:36 PM

பாகூர்:கிராமங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில், மூ.புதுக்குப்பம் அணி கோப்பையை கைப்பற்றியது.
புதுச்சேரி கிராமப்புற கிரிக்கெட் வளர்ச்சி சங்கம் மற்றும் கந்தன்பேட் டைரன்ட் கிரிக்கெட் அணி சார்பில், சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி- 2025, கடந்த மார்ச் 23ம் தேதி துவங்கி, ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நடந்து வந்தது. இதில், 28 கிராமங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடின.
மூ.புதுக்குப்பம் அணி, இந்த தொடரில் தோல்வியை சந்திக்காமல் அனைத்து போட்டிகளில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.
அரையிறுதியில், மூ.புதுக்குப்பம் அணியும், காட்டுக்குப்பம் அணியும் மோதின. இதில், முதலில் விளையாடிய காட்டுக்குப்பம் அணி 20 ஓவர்களில் 128 ரன்கள் பெற்றது. இரண்டாவது விளையாடிய மூ.புதுக்குப்பம் அணி 19.4 ஓவர்களில் 130 ரன்கள் பெற்று முதலிடம் பிடித்து வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின், கடைசி ஓவரில் மூ.புதுக்குப்பம் அணி வெற்றி பெற 12 ரன்கள் தேவைப்பட்டது. நவீன்ராஜ் இரண்டு சிக்சர்கள் அடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
காட்டுக்குப்பம் அணி இரண்டாம் இடமும், மதிக்கிருஷ்ணாபுரம் அணி மூன்றாம் இடமும், பனித்திட்டு அணி நான்காம் இடமும் பிடித்தன. முதல் இடம் பிடித்த அணிக்கு, காங்., மாநில செயலாளர் மோகன்தாஸ் 25,000 ரூபாயும், இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு ஜி.எம்.எண்டர்பிரைசர்ஸ் கவுதமன் 15,000 ரூபாயும், மூன்றாம் இடம் பிடித்த அணிக்கு நலம் சூப்பர் மார்கெட் வெங்கட்ராமன் 10,000 ரூபாயும், நான்காம் இடம் பிடித்த அணிக்கு கந்தன்பேட் ஜெயமூர்த்தி 5,000 ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கினர். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகனுக்கான விருதினை, வி.கே. ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் விஜி வழங்கினார்.
போட்டியை, வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், அருண், வினோத், பிரகாஷ், அன்பழகன், ராம்நாத் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்திருந்தனர். விழாவில், ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர் பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.