தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ‘நீட்’ அல்லாத படிப்புகளுக்கு மாப் – அப் சுற்று சேர்க்கை பட்டியல் வெளியீடு

‘நீட்’ அல்லாத படிப்புகளுக்கு மாப் – அப் சுற்று சேர்க்கை பட்டியல் வெளியீடு

‘நீட்’ அல்லாத படிப்புகளுக்கு மாப் – அப் சுற்று சேர்க்கை பட்டியல் வெளியீடு


ADDED : செப் 27, 2026 07:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 07:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சென்டாக் கலை, அறிவியல், வணிகவியல் மற்றும் தொழில்முறை சார்ந்த நீட் அல்லாத பட்டப் படிப்புகளுக்கான மாப்-அப் சுற்று தற்காலிக சேர்க்கை பட்டியலை வெளியிட்டுள்ளது.

வரைவு ஒதுக்கீட்டுப் பட்டியல் மீதான ஆட்சேபனைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு தீர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, இப்பட்டியல் சென்டாக் இணையதளத்தில் www.centacpuducherry.in  வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்கள் டாஷ்போர்டு லாகின் மூலம் விவரங்களைப் பயன்படுத்தி தங்களின் சேர்க்கை நிலையினை அறிந்து கொள்ளலாம். தற்காலிக ஒதுக்கீட்டு ஆணையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள், தங்களின் அசல் சான்றிதழ்கள், தேவையான கட்டணம் மற்றும் ஒதுக்கீட்டு ஆணையுடன் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லுாரிக்கு நேரில் சென்று 30ம் தேதி மாலை 5:00 மணிக்குள் சேர வேண்டும்.

புதுப்பிக்கப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் மற்றும் ஜாதி இன்னும் சமர்ப்பிக்காத மாணவர்கள், 30ம் தேதி மாலை 3 மணிக்குள் தங்களது லாக்-இன் பக்கத்தில் உள்ள கிரீவன்ஸ் அட்டாச்மன்ட் விருப்பத்தின் மூலம் சமர்ப்பித்த பிறகே ஒதுக்கீட்டு ஆணையைப் பதிவிறக்கம் செய்ய முடியும்.

விளையாட்டுப் பிரிவு கீழ் இடம் ஒதுக்கப்பட்ட மாணவர்கள், தங்களின் அசல் சான்றிதழ்களைச் சரிபார்க்க இன்று 28ம் தேதி சென்டாக் அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டும்.

சான்றிதழ்கள் வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்ட பின்னரே அவர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணை பதிவிறக்கம் செய்ய முடியும். இருப்பினும், 1, 2 அல்லது 3ம் சுற்றுகளிலேயே அசல் விளையாட்டுச் சான்றிதழ் சரிபார்ப்பை முடித்தவர்கள் நேரடியாக ஒதுக்கீட்டு ஆணையைப் பதிவிறக்கம் செய்து கல்லுாரியில் சேரலாம்.

கல்விக் கட்டண விவரங்களை அறிய சென்டாக் இணையதளத்தில் உள்ள தகவல் குறிப்பேட்டைப் பார்க்கலாம். இது தொடர்பான தகவல்கள் மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலமாக அனுப்பப்பட்டு வருகின்றன.

கூடுதல் விவரங்களுக்கு www.centacpuducherry.in என்ற இணையதளத்தையோ அல்லது 0413-2655570, 2655571 ஆகிய உதவி எண்களையோ தொடர்பு கொள்ளலாம் என, சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us