/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நவீன தொழில்நுட்ப பயிற்சி முகாம்
/
நவீன தொழில்நுட்ப பயிற்சி முகாம்
ADDED : பிப் 28, 2024 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார் : சுத்துகேணியில், ஆத்மா திட்டத்தின் கீழ் மகளிர்களுக்கான காய்கறி பயிர்களில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப பயிற்சி முகாம் நடந்தது.
காட்டேரிக்குப்பம் பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில் நடந்த முகாமை வேளாண் அலுவலர் வெங்கடாசலம் துவக்கி வைத்தார். காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய அலுவலர் அமலோற்பவநாதன், வானுார் வேளாண் அலுவலர் சவுந்தராஜன் பயிற்சி அளித்தனர்.
முகாமில் சுத்துக்கேணி, கொடாத்துார், கைக்கிலப்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சார்ந்த மகளிர் விவசாயிகள் பங்கேற்றனர். மகளிர் குழுவினருக்கு வேளாண் துறை மூலம் நிதியுதவி வழங்கப்பட்டது.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் குமரன் நன்றி கூறினார்.

