/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலை பணிக்கு எம்.எல்.ஏ., பூமி பூஜை.,
/
சாலை பணிக்கு எம்.எல்.ஏ., பூமி பூஜை.,
ADDED : நவ 11, 2025 06:40 AM

திருபுவனை: திருபுவனை தொகுதிக்குட்பட்ட நல்லுார் ஏரிக்கரை முதல் நல்லுார் குச்சிப்பாளையம் வரை ரூ. 11.23 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணியை அங்காளன் எம்.எல்.ஏ., நேற்று பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு சார்பில் மதகடிப்பட்டு அடுத்த நல்லுார் ஏரிக்கரையில் இருந்து, மேற்கே நல்லுார் குச்சிப்பாளையம்வரை ரூ.11.23 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. விழாவிற்கு அங்காளன் எம்.எல்.ஏ., தலைமையேற்று பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி,பொதுப்பணித்துறை நீர்ப் பாசன பிரிவு செயற்பொறியாளர் ராஜ்குமார், உதவி பொறியாளர் ஸ்ரீநாத் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் இளநிலை பொறியாளர் பாலாஜி, நிகழ்ச்சியில் ஒப்பந்ததாரர் தினேஷ், ஜே.சி.எம்., மக்கள் மன்றதொகுதி நிர்வாகிகள், நல்லுார் மற்றும் நல்லுார் குச்சிப்பாளையம் கிராம பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

